எங்கள் தனியுரிமைக் கோட்பாடுகள்
Snap-ல், உங்கள் தனியுரிமையை நாங்கள் முன்னுரிமை ஆக்குகிறோம். நீங்கள் Snapchat அல்லது எங்கள் பிற தயாரிப்புகளைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் உங்கள் நம்பிக்கையைச் சம்பாதிக்கிறோம் என்பதை அறிவோம் - எனவேதான் உங்கள் தகவல்களை மற்ற தொழில்நுட்ப நிறுவனங்களை விட வித்தியாசமாகக் கையாளுகிறோம்.
உங்கள் தனிப்பட்ட செய்திகளை நாங்கள் சேமிப்பதில்லை, நீங்கள் பதிவிட்ட எல்லாவற்றின் காலவரிசையையும் வெளிப்படையாக காண்பிப்பதில்லை. Snapchat நீங்கள் பகிர விரும்பும் விடயங்களை, நீங்கள் பகிரும் வரை மட்டுமே மக்களால் பார்க்க முடியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம், அவற்றை நீங்கள் பகிர விரும்பும் வரை, இது Snapchat-ஐ ஒரு நிரந்தரப் பதிவு போல் இல்லாமல், நண்பர்களுடனான உரையாடலைப் போல உணரவைக்கும் என நம்புகிறோம்.
எங்கள் தயாரிப்புகள் தொடர்ந்து மேம்பட்டு வந்தாலும், எங்கள் தனியுரிமைக் கொள்கைகள் மாறாமல் உள்ளன:
நாங்கள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தகவல்தொடர்பு கொள்கிறோம்
நீங்கள் Snap தயாரிப்புகளைப் பயன்படுத்தும்போது, எங்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள் - அந்தத் தகவல் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுவது எங்கள் பொறுப்பு ஆகும். எங்கள் தனியுரிமைக் கொள்கை நாங்கள் எவ்வாறு தகவல்களைச் சேகரிக்கிறோம், பயன்படுத்துகிறோம் மற்றும் பகிர்கிறோம் என்பதை விளக்குகிறது - அதன் சிறப்பம்சங்களை இங்கு படிக்கலாம். ஒரு குறிப்பிட்ட அம்சம் உங்கள் தரவை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது பற்றி அறிய நீங்கள் ஆர்வமாக இருந்தால், தயாரிப்பின்படி தனியுரிமை என்பது விடயங்களை இன்னும் விரிவாகப் பிரிக்கிறது. அம்சங்கள் தரவை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்று எங்கள் செயலிகளுக்குள்ளும், எங்கள் ஆதரவு மையத்திலும் விளக்குகிறோம். உங்களுக்குத் என்ன தேவை என்று கண்டுபிடிக்க முடியவில்லை எனில், நீங்கள் எப்போதும் கேட்கலாம்!
உங்களை எவ்வாறு வெளிப்படுத்துவது என்பதை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள்
சுய வெளிப்பாட்டை மேம்படுத்துவதற்கு தனியுரிமை அவசியம் என நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் நீங்கள் யாருடன் விடயங்களைப் பகிர்கிறீர்கள், அவற்றை எவ்வாறு பகிர்கிறீர்கள், எவ்வளவு நேரம் அவற்றைக் காணமுடியும் என்பவற்றின் கட்டுப்பாட்டில் நீங்கள் இருக்கிறீர்கள். உங்கள் கதையை யார் காணலாம், எந்த நண்பர்கள் உங்கள் Bitmoji-ஐ Snap வரைபடத்தில் பார்க்கலாம், மற்றும் உங்கள் Snaps எவ்வளவு நேரம் ஒட்டிக்கொண்டிருக்கும் என்பதையும் தீர்மானிக்கிறீர்கள். நீங்கள் உங்கள் விடயங்களை உங்களுக்கும் ஒரு நண்பருக்கும் இடையில் மட்டும் வைக்கலாம் அல்லது ஒரு கணத்தை முழு உலகத்துடனும் பகிர்ந்து கொள்ளலாம்! மேலும் அறிக.
தனியுரிமையை மனத்தில் கொண்டு வடிவமைக்கிறோம்
புதிய அம்சங்கள் தீவிரமான தனியுரிமை மதிப்பாய்வினைத் தாண்டிச் செல்கின்றன - நாங்கள் அவற்றை பற்றி பேசுகிறோம், அவற்றை விவாதிக்கிறோம், மற்றும் நாங்கள் பெருமிதம் கொள்ளும் மற்றும் பயன்படுத்த விரும்பும் தயாரிப்புகளை உருவாக்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தத் தயாரிப்புகளை ஒவ்வொரு நாளும், வேலையிலும் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பயன்படுத்துகிறோம். நாங்கள் உங்கள் தகவல்களை, எங்கள் நிறுவனம், எங்கள் குடும்பம் மற்றும் எங்கள் நண்பர்களுக்காகப் பயன்படுத்தும் அதே அக்கறையுடன் கையாளுகிறோம்.
நீங்கள் உங்கள் தகவலைக் கட்டுப்படுத்துகிறீர்கள்
உங்கள் தகவலைக் கட்டுப்படுத்த உங்களுக்கு உரிமை உள்ளது. அதனால்தான் உங்கள் தகவலை அணுகவும் புதுப்பிக்கவும், நீங்கள் எங்களுடன் எவ்வளவு தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறீர்கள் என்பதைச் சரிசெய்யவும், உங்கள் தகவலை - அல்லது உங்கள் கணக்கை முழுவதுமாக நீக்குவதற்கு எங்களைக் கோரவும் எளிதான வழிகளை வழங்குகிறோம். நீங்கள் எங்கள் கைபேசிச் செயலிகளிலேயே உங்கள் தனியுரிமை அமைப்புகளில் பெரும்பாலானவற்றைக் கட்டுப்படுத்தலாம். நீங்கள் உள்நுழைந்து உங்கள் Snapchat தகவலை இங்குபதிவிறக்கலாம். உங்கள் தரவைப் பற்றி ஏதேனும் குறிப்பிட்ட கேள்விகள் இருந்தால், எங்களைத் தொடர்புகொள்ளத் தயங்க வேண்டாம்!
நீக்குதல் எங்கள் இயல்புநிலை
Snapchat, நண்பர்களை நேரில் சந்திப்பதுபோன்ற உணர்வைப் படம்பிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது - அதனால்தான் திறக்கப்பட்டவுடன் அல்லது காலாவதியானவுடன் Snaps மற்றும் அரட்டைகள் எங்கள் சேவையகங்களிலிருந்து நீக்கப்படும். ஒரு Snap நீக்கப்பட்ட பிறகு, அது எப்போது அனுப்பப்பட்டது, யாருக்கு அனுப்பப்பட்டது போன்ற அடிப்படை விவரங்களை எங்களால் முதன்மையாகக் காண முடியும். மேலும் அறிக.
இதை நினைவில் கொள்வது அவசியம், பிற Snapchat பயனர்கள் எப்போதும் ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம் அல்லது மூன்றாம்-நபரின் செயலியைப் பயன்படுத்தி விடயங்களை சேமிக்க முடியும். முடிவாக, தெரிந்து கொள்ள தேவையுள்ள விடயங்களை நீங்கள் நிஜ வாழ்க்கையில் நம்புவதுபோல் உண்மையிலேயே நம்பும் நபர்களுடன் மட்டும் பகிர்ந்துகொள்வது நல்லது!