உலகம் முழுவதும் உள்ள Snapchat பயனர்கள் தங்கள் நெருக்கமான நண்பர்களுடன் பேசவும் தங்களைத் தாங்களே ஆக்கப்பூர்வமாக வெளிப்படுத்திக் கொள்ளவும் எங்கள் செயலியை ஒவ்வொரு நாளும் பயன்படுத்துகின்றனர். எங்கள் இலக்கு நலமான, பாதுகாப்பான, வேடிக்கையான சூழலில் உண்மையான நட்புகளை வளர்த்தெடுக்கும் ஆதரிக்கும் தயாரிப்புகளை வடிவமைப்பதும் தொழில் நுட்பத்தை உருவாக்குவதும் ஆகும். எங்கள் கொள்கைகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்களிலிருந்து, தடுப்பிற்கான எங்கள் கருவிகள் மற்றும் தீங்கான உள்ளடக்கத்திற்கு எதிராக செயல்படுத்துல், மற்றும் எங்கள் சமூகத்திற்கு கற்பித்து அதிகாரமளிப்பதற்கு உதவும் முன்னெடுப்புகள் வரை — நாங்கள் அதனைச் செய்வதற்கான வழிகளை மேம்படுத்தத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
எங்கள் வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்தின் நிலை, எங்கள் கொள்கைகளை நாங்கள் எப்படிச் செயல்படுத்துகிறோம், தகவல்களுக்கான சட்ட அமைப்புகள் மற்றும் அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு எப்படி பதிலளிக்கிறோம், மற்றும் எதிர்காலத்தில் எந்தப் பகுதிகளில் அதிக தகவல்களை வழங்க நாங்கள் நாடுகிறோம் என்பது பற்றி கூடுதல் வெளிப்படைத்தன்மையை வழங்குவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்த முயற்சிகள் பற்றிய தகவல்களை வழங்க ஆண்டுக்கு இருமுறை வெளிப்படைத்தன்மை அறிக்கைகளை வெளியிடுகிறோம் மேலும் இணையப் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்து ஆழமான அக்கறை காட்டும் பல பங்குதாரர்களுக்கு உதவும் வகையில் கூடுதல் விரிவானதாக இந்த அறிக்கைகளை உருவாக்க உறுதிபூண்டுள்ளோம்.
இந்த அறிக்கை 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கானது (ஜூலை 1 - டிசம்பர் 31). எங்கள் முந்தைய அறிக்கைகளைப் போல், இந்தக் காலகட்டத்தில் உலகளவிலான எங்கள் மொத்த மீறல்கள் பற்றிய தரவுகள்; குறிப்பிட்ட வகையிலான மீறல்களுக்கு எதிராக நாங்கள் பெற்ற மற்றும் செயல்படுத்திய உள்ளடக்க அறிக்கைகளின் எண்ணிக்கை; சட்ட நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களிலிருந்து பெற்ற கோரிக்கைகளை நாங்கள் எப்படி ஆதரிக்கிறோம் மற்றும் பூர்த்திசெய்கிறோம்; மற்றும் நாடு வாரியான எங்கள் அமல்படுத்தல்கள் பற்றிய தகவல்களை அது பகிர்கின்றது.
எங்கள் பாதுகாப்பு அமல்படுத்தல் மற்றும் எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கைகள் இரண்டையும் மேம்படுத்தும் எங்கள் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த அறிக்கையும் பல புதிய கூறுகளைக் கொண்டுள்ளது:
உள்ளடக்கத்தின் மீறல் பார்வை விகிதம் (VVR), இது எங்கள் கொள்கைகளை மீறிய உள்ளடக்கத்தின் எல்லா Snapகள் (அல்லது பார்வைகள்) விகிதம் பற்றிய சிறந்த புரிதலை வழங்குகிறது.
உலகளவில் தவறான தகவல்களுக்கான மொத்த உள்ளடக்கம் மற்றும் கணக்கு அமல்படுத்தல் — உலகளவிலான பெருந்தொற்றுடனும் குடிமை மற்றும் மக்களாட்சி நடைமுறைகளை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளுடனும் உலகம் போராடும் இந்தக் காலகட்டத்தில் இது குறிப்பாகப் பொருத்தமானதாகும்.
சாத்தியமான வணிகமுத்திரை மீறல்கள் மீதான விசாரணைகளை ஆதரிப்பதற்கான கோரிக்கைகள்.
எதிர்கால அறிக்கைகளில் கூடுதல் விரிவான தரவுகளை வழங்குவதற்கான எங்கள் திறனை உயர்த்தும் மேம்பாடுகளில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதில் மீறல் தரவுகளுக்கான எங்கள் துணைப் பிரிவுகளை விரிவுபடுத்துவதும் அடங்கும். எடுத்துக்காட்டாக, நாங்கள் தற்போது ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்கள் தொடர்பான மீறல்களை அறிக்கையிடுகிறோம், இதில் சட்டவிரோத போதைப் பொருட்களும் ஆயுதங்களும் உள்ளடங்கும். வருங்காலங்களில், அவை ஒவ்வொன்றையும் அவற்றிற்குரிய துணைப் பிரிவுகளில் உள்ளடக்கத் திட்டமிடுகிறோம்.
புதிய இணைய அச்சுறுத்தல்களும் நடத்தைகளும் வளர்ந்து வருவதால், அவற்றை எதிர்கொள்வதற்காக எங்கள் கருவிகளையும் வழிமுறைகளையும் தொடர்ந்து மேம்படுத்துவோம். இடர்களையும் எங்கள் சமூகத்தைச் சிறப்பாகப் பாதுகாப்பதற்காக எங்கள் தொழில் நுட்பங்களை மேம்படுத்துவது எப்படி என்றும் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்து வருகிறோம். தவறு செய்பவர்களுக்கு ஒரு படி முன்னால் இருப்பதற்கான வழிகள் பற்றி பாதுகாப்பு வல்லுநர்களிடமிருந்து வழக்கமான வழிகாட்டுதல்களைப் பெறுகிறோம் — மேலும் மதிப்புமிக்க கருத்துக்களை வழங்கி இன்னும் சிறப்பாக இருக்க உங்களை உந்தித் தள்ளும் வளர்ந்து வரும் எண்ணிக்கையிலான எங்கள் கூட்டாளர்களுக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.
பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கான எங்கள் அணுகுமுறை, அவற்றிற்கான வளங்கள் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு இப்பக்கத்தில் கீழே உள்ள எங்கள் வெளிப்படைத்தன்மை அறிக்கையிடுதல் பற்றி என்ற கீற்றைப் பாருங்கள்.
எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் தீங்கான உள்ளடக்கத்தைத் தடை செய்கின்றன, அதில் பின்வருன அடங்கும் தவறான தகவல்; தீங்கு விளைவிக்கும் சதிக் கோட்பாடுகள்; ஏமாற்றும் நடைமுறைகள்; சட்டவிரோதச் செயல்பாடுகள், சட்டவிரோத போதை மருந்துகள், கள்ளச் சரக்குகள், போதைப் பொருள் அல்லது சட்டவிரோத ஆயுதங்களை வாங்குதல் அல்லது விற்றல் உட்பட; வெறுப்புப் பேச்சு, வெறுப்புக் குழுக்கள் மற்றும் பயங்கரவாதம்; தொந்தரவளித்தல் மற்றும் துன்புறுத்தல்; அச்சுறுத்தல்கள், வன்முறை மற்றும் தீங்கு, சுய தீங்கைப் புகழ்வது உட்பட; வெளிப்படையான பாலியல் உள்ளடக்கம்; மற்றும் சிறார் பாலியல் சுரண்டல்.
ஒவ்வொரு நாளும் எங்கள் Snapchat கேமராவைப் பயன்படுத்தி சராசரியாக ஐந்து பில்லியனுக்கும் அதிகமான Snapகள் உருவாக்கப்படுகின்றன. ஜூலை 1 - டிசம்பர் 31, 2020 வரை, உலகளவில் எங்கள் வழிகாட்டுதல்களை மீறிய 5,543,281 உள்ளடக்கங்களுக்கு எதிராக அமல்படுத்தியுள்ளோம்.
அமல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் இவை அடங்கும், மீறல் உள்ளடக்கத்தை நீக்குதல்; கேள்விக்குரிய கணக்கை நிறுத்துதல் அல்லது தெரிவுநிலையை வரம்பிடுதல்; மற்றும் சட்ட அமலாகத்திற்கு அந்த உள்ளடக்கத்தைப் பரிந்துரைத்தல். எங்கள் வழிகாட்டுதல்களை மீறியதற்காக ஒரு கணக்கு நிறுத்தப்பட்டால், அந்தக் கணக்கின் உரிமையாளர் புதிய கணக்கை உருவாக்க அல்லது Snapchat ஐ மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டார்.
அறிக்கைக் காலகட்டத்தில், எங்கள் மீறல் பார்வை விகிதம் (VVR) 0.08 சதவீதம் ஆகும், அதாவது Snap இல் ஒவ்வொரு 10,000 உள்ளடக்கப் பார்வைகளுக்கும், எட்டு எங்கள் வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தன.
நாங்கள் செயலியினுள் அறிக்கையிடுதல் கருவிகளை வழங்குகிறோம், அவை நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழுவினருக்கு உள்ளடக்கத்தை விரைவாகவும் எளிதாகவும் அறிக்கையிட Snapchat பயனர்களுக்கு உதவுகின்றன, அவர்கள் அறிக்கையினை விசாரித்து, பொருத்தமான நடவடிக்கை எடுப்பார்கள். எங்கள் குழுக்கள் முடிந்த வரையில் விரைவாக அமலாக்க நடவடிக்கைகளை எடுக்கின்றன, பெரும்பாலான நேர்வுகளில் செயலியினுள் அறிக்கையைப் பெற்ற இரண்டு மணிநேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கிறோம்.
செயலியினுள் அறிக்கையிடுதலுடன் கூடுதலாக, எங்கள் உதவித் தளத்தின் வழியாக இணைய அறிக்கையிடும் விருப்பத்தையும் வழங்குகிறோம். மேலும் சிறார் பாலியல் தவறான பயன்பாடு பொருள், சட்டவிரோத போதை மருந்துகள் அல்லது ஆயுதங்கள், அல்லது வன்முறை அச்சுறுத்தல் போன்ற மீறல் மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை முன்கூட்டியே கண்டறியும் திறன்களை எங்கள் குழுக்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன. சிறார் பாலியல் சுரண்டல் மற்றும் தவறான பயன்பாட்டை எதிர்ப்பதற்கான எங்கள் பணிகள் பற்றிய குறிப்பிட்ட விவரங்களை நாங்கள் இந்த அறிக்கையில் விவரித்துள்ளோம்.
கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிட்ட படி, 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், ஆள் மாறாட்டம் தொடர்புடைய உள்ளடக்கம் அல்லது பாலியல் வெளிப்படை உள்ளடக்கம் பற்றிய செயலியினுள் அறிக்கைகள் அல்லது கோரிக்கைகளையே நாங்கள் பெரும்பாலும் பெற்றோம். மீறல்கள் பற்றிய அறிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்கான நேரத்தை எங்களால் குறிப்பிட்ட அளவு மேம்படுத்த முடிந்தது, குறிப்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட பொருட்கள், சட்டவிரோத மருந்துகள், கள்ளச் சரக்குகள், மற்றும் ஆயுதங்கள் உட்பட; பாலியல் வெளிப்படை உள்ளடக்கம்; தொந்தரவளித்தல் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றில்.
மொத்த உள்ளடக்க அறிக்கைகள் *
மொத்தம் செயற்படுத்திய உள்ளடக்கம்
மொத்தம் செயற்படுத்திய தனித்துவமான கணக்குகள்
10,131,891
5,543,281
2,100,124
Reason
Content & Account Reports*
Content Enforced
% of Total Content Enforced
Unique Accounts Enforced
Turnaround Time**
Sexually Explicit Content
6,638,110
4,783,518
73.2%
1,441,208
<1
Regulated Goods
776,806
620,083
9.5%
274,883
<1
Threatening / Violence / Harm
1,077,311
465,422
7.1%
288,091
13
Harassment and Bullying
911,198
319,311
4.9%
249,421
27
Spam
560,509
243,729
3.7%
120,898
5
Hate Speech
241,332
121,639
1.9%
92,314
15
Impersonation
1,896,060
75,463
1.2%
43,983
13
*எங்கள் செயலியினுள்ளும் உதவி விசாரணைகள் மூலமும் பெறப்பட்ட மீறல் குற்றச்சாட்டுகளை உள்ளடக்க அறிக்கைகள் பிரதிபலிக்கின்றன.
**முடிப்பு நேரம் என்பது ஒரு பயனர் அறிக்கை மீது நடவடிக்கை எடுப்பதற்கான சராசரி நேரத்தை மணிநேரங்களில் பிரதிபலிக்கிறது.
தீங்கான உள்ளடக்கத்தைப் பொறுத்த வரை, கொள்கைகளையும் அமலாக்கத்தையும் பற்றி மட்டும் சிந்தித்தால் போதாது — தளங்கள் அவர்களின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். தொடக்கத்திலிருந்தே Snapchat வழக்கமான சமூக ஊடகத் தளங்களிலிருந்து வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளது, எவ்வித மட்டுறுத்தலும் இல்லாமல் எவரும் எதையும் பகிரும் உரிமை கொண்ட திறந்த செய்தியோடைக்குப் பதிலாக — நெருக்கமான நண்பர்களுடன் பேசுதல் எங்கள் முதன்மை பயன்பாட்டு நோக்கை ஆதரிக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது.
எங்கள் அறிமுகத்தில் நாங்கள் விளக்கியவாறு, வாக்களித்தலைக் குறைத்தல் போன்ற குடிமைச் செயல்பாடுகளை வலுவிழக்கச் செய்வதை இலக்காகக் கொண்ட தவறான தகவல்கள், நிரூபிக்கப்படாத மருத்துவக் கூற்றுகள், மற்றும் துன்ப நிகழ்வுகளை மறுக்கும் சதிக் கோட்பாடுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் தவறான தகவல்களைப் பகிர்வதை எங்கள் வழிகாட்டுதல்கள் தெளிவாகத் தடை செய்கின்றன. எங்கள் வழிகாட்டுதல்கள் அனைத்து Snapchat பயனர்களுக்கும் தொடர்ச்சியாகப் பொருந்தும் — அரசியல்வாதிகள் அல்லது பிரபலங்களுக்காக எந்த சிறப்பு விதிவிலக்குகளும் இல்லை.
எங்கள் செயலி முழுவதும் Snapchat வைரல்தன்மையைத் தடுக்கிறது, இது தீங்கு விளைவிக்கும் மற்றும் பரபரப்பான உள்ளடக்கத்திற்கான ஊக்கத்தை நீக்குகிறது, மேலும் தவறான உள்ளடக்கம் பரவுவதுடன் தொடர்புடைய கவலைகளைக் குறைக்கிறது. நாங்கள் திறந்த செய்தியோடையைக் கொண்டிருக்கவில்லை, மேலும் சரிபார்க்கப்படாத உள்ளடக்கம் 'வைரல் ஆவதற்கான' வாய்ப்பை வழங்குவதில்லை. எங்கள் உள்ளடக்கத் தளமான, Discover, சரிபார்க்கப்பட்ட ஊடகப் பதிப்பாளர்கள் மற்றும் உள்ளடக்க உருவாக்கிகளிடமிருந்து மட்டுமே உள்ளடக்கத்தைக் காட்சிப்படுத்துகிறது.
2020 ஆம் ஆண்டு நவம்பரில், எங்கள் புதிய பொழுதுபோக்குத் தளமான ஸ்பாட்லைட்டை அறிமுகப்படுத்தினோம் மேலும் உள்ளடக்கம் பெரும் பார்வையாளர்களை அடைவதற்கு முன்பாக அது எங்கள் வழிகாட்டுதல்களுடன் இணங்குகிறது என்பதை உறுதிப்படுத்துவதற்காக உள்ளடக்கத்தை முன்கூட்டியே மட்டுறுத்துகிறோம்.
மேலும் அரசியல் விளம்பரங்களுக்கு வித்தியாசமான அணுகுமுறையை வெகு காலம் முன்பே எடுத்துள்ளோம். Snapchat இல் உள்ள அனைத்து உள்ளடக்கங்களையும் போல், எங்கள் விளம்பரங்களிலும் தவறான தகவல்கள் மற்றும் ஏமாற்றும் நடைமுறைகளைத் தடை செய்கிறோம். தேர்தல் தொடர்பான விளம்பரங்கள், பிரச்சினை தீர்வு பரப்புரை விளம்பரங்கள், மற்றும் பிரச்சினை பற்றிய விளம்பரங்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் விளம்பரங்களும் ஆதரவளிக்கும் நிறுவனங்களைத் தெரிவிக்கும் வெளிப்படையான "நிதி வழங்கியோர்" செய்தியைக் கொண்டிருக்க வேண்டும். எல்லா அரசியல் விளம்பரங்களிலும் உண்மை சரிபார்ப்பதற்காக மனித மீளாய்வை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் எங்கள் மீளாய்வில் தேர்ச்சியடையும் எல்லா விளம்பரங்கள் பற்றிய தகவல்களையும் எங்கள் அரசியல் விளம்பர நூலகத்தில் வழங்குகிறோம்.
இது ஒரு கச்சிதமான அணுகுமுறை அல்ல என்றாலும், கோவிட்-19 மற்றும் 2020 அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றிய தவறான தகவல்கள் பல தளங்களிலும் பரவிய போக்கு நிலவிய குறிப்பான இந்தக் காலகட்டத்தில், சமீபத்திய ஆண்டுகளில் தவறான தகவல்களின் பெரும் அதிகரிப்பிலிருந்து Snapchat ஐப் பாதுகாக்க இது எங்களுக்கு உதவியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் உலகளவில் எங்கள் தவறான தகவல்கள் வழிகாட்டுதல்களை மீறியதற்காக 5,841 உள்ளடக்கங்கள் மற்றும் கணக்குகளுக்கு எதிராக Snapchat அமல்படுத்தியுள்ளது. எதிர்கால அறிக்கைகளில், தவறான தகவல் மீறல்கள் குறித்து கூடுதல் விரிவான பிரிவுகளை வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
2020 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் அமெரிக்காவில் வாக்களிப்பதற்கான அணுகல் மற்றும் தேர்தல் முடிவுகளை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகள் பற்றிய அதிகரித்த கவலையைக் கருத்தில் கொண்டு, எங்கள் தளத்தில் ஏதேனும் சாத்தியமான தவறான பயன்பாட்டிற்கான வாய்ப்பு அல்லது ஆபத்தை மதிப்பிடுதல், எல்லா வடிவமைப்புகளையும் கண்காணித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்திய உள்ளார்ந்த பணிக் குழுவை நாங்கள் உருவாக்கினோம், மேலும் சரியான செய்தி மற்றும் தகவலின் மூலமாக Snapchat இருப்பதை உறுதிப்படுத்துவதற்காகப் பணியாற்றினோம். இந்த முயற்சிகளில் இவையும் அடங்கும்:
தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்திற்கான எங்கள் வகைப்பாட்டில், டீப் ஃபேக் போன்ற தவறாக வழிநடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஊடகங்களைச் சேர்ப்பதற்காக எங்கள் சமூக வழிகாட்டுதல்களைத் திருத்தினோம்;
பதிப்பாளர்கள் ஏதேனும் தவறான செய்திகளை செய்தி அறிக்கைகள் மூலம் தவறுதலாக ஊக்குவிப்பதைத் தவிர்ப்பதற்காக எங்கள் Discover செய்தி கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றினோம்;
எங்கள் Discover உள்ளடக்கத் தளத்தில் உள்ளடக்கம் தோன்றும் Snap நட்சத்திரங்கள் எங்கள் சமூக வழிகாட்டுதல்களுடன் இணங்குவதையும், வேண்டுமென்றே தவறான தகவலைப் பரப்பவில்லை என்றும் உறுதிப்படுத்த அவர்களிடம் கோரினோம்;
எந்தவொரு மீறல் உள்ளடக்கத்திற்கும் தெளிவான அமலாக்க வெளிப்பாட்டைக் கொண்டிருந்தோம் — அவை பரவலாகப் பகிரப்படும் தீங்கை உடனடியாகக் குறைப்பதற்காக உள்ளடக்கத்தை அடையாளமிடுவதற்குப் பதிலாக, நாங்கள் அவற்றை நீக்கினோம்; மேலும்
இடர்களை மதிப்பிடுவதற்காகவும் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதற்காகவும் Snapchat இல் தவறான தகவல்களைப் பகிர பயன்படுத்தப்படக் கூடிய தவறான தகவல்களின் பிற மூலங்களையும் நிறுவனங்களையும் முன்கூட்டிய பகுப்பாய்வு செய்தோம்.
கோவிட்-19 பெருந்தொற்றுக் காலம் முழுவதும், எங்கள் Discover செய்தி கூட்டாளர்கள் வழங்கும் செய்தியறிக்கை வழியாக, பொதுச் சுகாதார அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்களுடனான PSAகள் மற்றும் Q&A’கள் வழியாக, மிகைப்படுத்தப்பட்ட மெய்மை லென்ஸஸ் மற்றும் வடிகட்டிகள் போன்ற ஆக்கப்பூர்வக் கருவிகள் வழியாக, வல்லுநர்களின் பொதுச் சுகாதார வழிகாட்டுதல்களை Snapchat பயனர்களுக்கு நினைவுபடுத்துதல் போன்றவற்றின் வழியே உண்மைச் செய்திகளையும் தகவல்களையும் வழங்குவதற்காக இதுபோன்ற அணுகுமுறைகளை நாங்கள் எடுத்துள்ளோம்.
மொத்த உள்ளடக்கம் & கணக்கு செயற்படுத்தல்கள்
5,841
எங்கள் சமூகத்தின் எந்தவொரு உறுப்பினரையும், குறிப்பாக இளம் வயதினரை மற்றும் சிறார்களைச் சுரண்டுவது, சட்டவிரோதமாகவும் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும், எங்கள் வழிகாட்டுதல்களின் மூலம் தடைசெய்யப்பட்டதாகவும் உள்ளது. எங்கள் தளத்தில் தவறான பயன்பாட்டைத் தடுப்பது, கண்டறிவது, நீக்குவதே எங்களின் முன்னுரிமையாகும், மேலும் நாங்கள் சிறார் பாலியல் தவறான பயன்பாட்டுப் பொருள் (CSAM) மற்றும் பிற வகைச் சுரண்டல் உள்ளடக்கங்களை எதிர்கொள்வதற்கான எங்கள் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்.
CSAM இன் அறியப்பட்ட படங்களை அடையாளம் காண்பதற்கும் காணாமல் போன மற்றும் சுரண்டலுக்குள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையத்திற்கு (NCMEC) அவற்றை அறிக்கையிடுவதற்கும் எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழுக்கள் PhotoDNA தொழில் நுட்பம் போன்ற முன்கூட்டியே கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்துகின்றன. CSAM நிகழ்வுகளை நாங்கள் முன்கூட்டியே கண்டறியும்போது அல்லது அடையாளம் காணும்போது, நாங்கள் அவற்றைப் பாதுகாத்து வைத்து NCMECக்கு அறிக்கையிடுகிறோம், அவர்கள் அதனை மீளாய்வு செய்து பின் சட்ட அமலாக்கத்துடன் ஒருங்கிணைப்பார்கள்.
2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், CSAM கொண்டிருந்தது என்பதற்காக எங்கள் சமூக வழிகாட்டுதல்களை மீறியதற்காக உலகளவில் மொத்தமாக 2.99 சதவீத கணக்குகளுக்கு எதிராக நாங்கள் அமலாக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இவற்றில், 73 சதவீத உள்ளடக்கத்தை நாங்கள் முன்கூட்டியே கண்டறிந்து நடவடிக்கை எடுத்தோம். ஒட்டுமொத்தமாக, CSAM மீறல்களுக்காக 47,550 கணக்குகளை நாங்கள் நீக்கினோம், மேலும் ஒவ்வொரு நேர்விலும் அந்த உள்ளடக்கத்தை NCMECக்கு அறிக்கையளித்தோம்.
இந்தக் காலகட்டத்தில், CSAM ஐ கூடுதலாக எதிர்ப்பதற்காக பல நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். CSAM வீடியோக்களை அடையாளம் கண்டு NCMECக்கு அதனை அறிக்கையளிப்பதற்காக, வீடியோவிற்கான Google இன் Child Sexual Abuse Imagery (CSAI) தொழில் நுட்பத்தை நாங்கள் பயன்படுத்தினோம். அறியப்பட்ட CSAM படங்களுக்கான எங்களின் PhotoDNA கண்டறிதலையும் தொழில்துறை தொகுப்பு தரவுத்தளங்களையும் இணைத்து, இப்போது எங்களால் அறியப்பட்ட வீடியோக்கள் படங்களை முன்கூட்டியே கண்டறிந்து அதிகாரிகளுக்கு அறிக்கையிட முடிகிறது. எங்கள் கண்டறிதலிலும் — அதன் மூலம் இந்தக் குற்றவியல் நடத்தையை அறிக்கையளிப்பதிலும் இன்னும் செயல்திறமிக்கதாக மாற இந்த மேம்படுத்தப்பட்ட திறன் எங்களுக்கு உதவியுள்ளது.
கூடுதலாக, அந்நியர்களுடன் தொடர்பு கொள்வது குறித்த ஆபத்துகளைப் பற்றியும் ஏதேனும் வகை தவறான பயன்பாட்டை எங்கள் நம்பிக்கை மற்றும் பாதுகாப்புக் குழுவிற்கு எச்சரிப்பதற்கு செயலியினுள் அறிக்கையிடுதலை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றியும் Snapchat பயனர்களுக்கு கற்பிப்பதில் உதவுவதற்காக தொழில் துறை வல்லுநர்களுடனான எங்கள் கூட்டணிகளை விரிவுபடுத்தி கூடுதல் செயலியினுள் அம்சங்களை வெளியிட்டு வருகிறோம். உயிருக்கான உடனடி அச்சுறுத்தல் அல்லது CSAM தொடர்புடைய நேர்வுகள் போன்ற அவசரகால நிகழ்வுகளை அறிக்கையிடுவதற்கான இரகசியச் சேனலை சரிபார்க்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர்களுக்கு வழங்கும் எங்கள் நம்பக்கூடியவர்கள் புகாரளிக்கும் திட்டத்தில் கூடுதல் கூட்டாளர்களைத் தொடர்ந்து சேர்ந்து வருகிறோம். பாதுகாப்புக் கல்வி, நல்வாழ்வு வளங்கள், மற்றும் பிற அறிக்கையிடுதல் உதவிகளை வழங்குவதற்காக இந்தக் கூட்டாளர்களுடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறோம், இதன் மூலம் அவர்கள் செயல் திறத்துடன் Snapchat சமூகத்திற்கு உதவ முடியும்.
கூடுதலாக, தொழில் நுட்பக் கூட்டணிக்கான இயக்குநர்கள் குழுவிலும் நாங்கள் சேவையாற்றுகிறோம், இது இணையத்தில் சிறார் பாலியல் துன்புறுத்தல் சுரண்டல் மற்றும் துன்புறுத்தலைத் தடுக்கவும் ஒழிக்கவும் பணியாற்றி வரும் தொழில் நுட்பத் துறையின் தலைவர்களின் குழு ஆகும், மேலும் இந்தப் பரப்பில் எங்கள் கூட்டு முயற்சிகளை வலிமைப்படுத்தவும் கூடுதல் தீர்வுகளை ஆராயவும் பிற தளங்களுடனும் பாதுகாப்பு வல்லுநர்களுடனும் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.
மொத்தக் கணக்கு நீக்கங்கள்
47,550
Snap இல், இந்தப் பிரிவிற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் எங்கள் தளத்தில் தவறான பயன்பாட்டிற்கான ஏதேனும் சாத்தியமான வாய்ப்புகளை அகற்றுதல் போன்றவை எங்கள் அமெரிக்க தேர்தல் ஒருமைப்பாடு பணிக்குழுவின் வேலைகளின் ஒரு பகுதியாக இருந்தன. எங்கள் தயாரிப்பு கட்டமைப்பு மற்றும் எங்கள் குழு உரையாடல் செயல்பாட்டின் வடிவமைப்பு ஆகிய இரண்டும் தீங்கான உள்ளடக்கத்தின் பரவல் மற்றும் ஒன்றிணைவதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்துகின்றன. நாங்கள் குழு உரையாடல்களை வழங்குகிறோம், ஆனால் அவை பல டஜன் கணக்கான உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கைக்கு வரம்பிடப்பட்டுள்ளன, அவை நெறிமுறைகளால் பரிந்துரைக்கப்படுவதில்லை, மேலும் நீங்கள் அந்தக் குழுவின் உறுப்பினராக இல்லாவிட்டால் எங்கள் தளத்தில் கண்டறியக்கூடியதாகவும் இல்லை.
2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், பயங்கரவாதம், வெறுப்புப் பேச்சு, தீவிரவாத உள்ளடக்கத்திற்கான எங்கள் தடையை மீறியதற்காக எட்டு கணக்குகளை நாங்கள் நீக்கினோம்.
மொத்தக் கணக்கு நீக்கங்கள்
8
இந்தப் பிரிவு தனித்தனி நாடுகளின் மாதிரியில் எங்கள் விதிகளை அமல்படுத்துவது பற்றியக் கண்ணோட்டத்தை அளிக்கிறது. எங்கள் சமூக வழிகாட்டுதல்கள் Snapchat இல் உள்ள அனைத்து உள்ளடக்கத்திற்கும்— இடங்கருதாது—உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து Snapchat பயனர்களுக்கும் பொருந்தும்.
பிற எல்லா நாடுகளுக்கான தகவல்களும் இணைக்கப்பட்ட CSV கோப்பு வழியாகப் பதிவிறக்கக் கிடைக்கின்றன.
பிராந்தியம்
உள்ளடக்க அறிக்கைகள்*
செயல்படுத்தப்பட்ட உள்ளடக்கம்
செயல்படுத்தப்பட்ட தனித்துவமான கணக்குகள்
வட அமெரிக்கா
4,230,320
2,538,416
928,980
ஐரோப்பா
2,634,878
1,417,649
535,649
உலகின் பிற பகுதிகள்
3,266,693
1,587,216
431,407
மொத்தம்
10,131,891
5,543,281
1,896,015