Snap வணிக உள்ளடக்கக் கொள்கை
அமலுக்கு வருதல்: செப்டம்பர் 15, 2025
Snapchat என்பது மக்கள் தங்களை வெளிப்படுத்தவும், தருணங்களை அனுபவித்திடவும், உலகத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும், ஒன்றாக மகிழ்ந்திருக்க உதவும் செயலி ஆகும். Snapchat பயனர்கள் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம், அந்த இலக்குகள் தாம் எங்கள் கொள்கைகளை இயக்குகின்றன. இந்த வணிக உள்ளடக்கக் கொள்கை, Snap வழங்கும் விளம்பரங்களைத் தவிர, எந்தவொரு பிராண்ட், தயாரிப்புகள், பொருட்கள் அல்லது சேவையையும் (உங்கள் சொந்த பிராண்ட் அல்லது தொழில் உட்பட) ஸ்பான்சர் செய்த, ஊக்குவித்த அல்லது விளம்பரப்படுத்தும் Snap தளத்தில் உள்ள உள்ளடக்கத்திற்கும், ரொக்கப் பணம் அல்லது இலவசமாகப் பரிசுகளை பெறுவதன் மூலம் இடுகையிட நீங்கள் ஊக்குவிக்கப்பட்ட உள்ளடக்கத்திற்கும் பொருந்தும்.
Snap இன் சேவை நிபந்தனைகள் மற்றும் சமூக வழிகாட்டுதல்கள், மற்றும் எங்கள் சேவைகளைப் பயன்படுத்துவதை நிர்வகிக்கும் மற்ற அனைத்து Snap கொள்கைகளுக்கும் நீங்கள் இணங்க வேண்டும். நாங்கள் எங்கள் விதிமுறைகள், கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அவ்வப்போது புதுப்பிக்கலாம், எனவே அவற்றை தவறாமல் சரிபார்த்துக் கொள்ளவும்.
உங்கள் உள்ளடக்கம் விளம்பரப்படுத்தும் பிராண்டுகள், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் குறித்து நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும்; நீங்கள் தவறாக வழிநடத்தும், ஏமாற்றும் அல்லது புண்படுத்தும் உள்ளடக்கத்தைத் தவிர்க்க வேண்டும்; மேலும் எங்கள் பயனர்களின் தனியுரிமையை ஒருபோதும் சமரசம் செய்யக்கூடாது.
உங்கள் உள்ளடக்கமும், அது விளம்பரப்படுத்தும் எந்தவொரு பிராண்ட், தயாரிப்பு அல்லது சேவையும் 13 வயதுக்கு மேற்பட்ட Snapchat பயனர்களுக்குப் பொருத்தமாக இருப்பதை உறுதிப்படுத்துவது உங்கள் பொறுப்பு. நீங்கள் கிடைக்கக்கூடிய வயது இலக்கு உள்ளடக்கத்திற்கான விருப்பத்தை நாங்கள் உங்களுக்கு வழங்கலாம். இந்தக் கொள்கையில் அந்த உள்ளடக்கத்திற்கு வயது இலக்கு தேவையாயின் அல்லது உள்ளடக்கம் இயங்கும் பிராந்தியத்தில் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது தொழில்துறை தரங்களின்படி, அந்த இலக்கு விருப்பங்களைப் பயன்படுத்துவதற்கும் சரியான வயதைத் தேர்ந்தெடுப்பதற்கும் நீங்கள் பொறுப்பாவீர்கள், நீங்கள் அவ்வாறு செய்யத் தவறினால் நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். தேவையான வயது-இலக்கு விருப்பம் கிடைக்கவில்லை என்றால், அந்த உள்ளடக்கத்தைப் பதிவிட வேண்டாம்.
வீட்டுவசதி, கடன் அல்லது வேலைவாய்ப்பு தொடர்பான வணிக உள்ளடக்கம், ஒரு இனக்குழு, இனம், மதம் அல்லது நம்பிக்கை, தேசிய தோற்றம், வயது, பாலியல் நோக்குநிலை, பாலினம், பாலின அடையாளம் அல்லது வெளிப்பாடு, இயலாமை அல்லது இயலாமை நிலை, அல்லது பாதுகாக்கப்பட்ட வகுப்பின் எந்த உறுப்பினரையும் நேரடியாகவோ அல்லது இலக்குப்படுத்தினாலோ(பொருந்தினால்) அனுமதிக்கப்படுவதில்லை.
பொருந்தக்கூடிய சட்டங்கள், இயற்றுச்சட்டங்கள், அவசரச் சட்டங்கள், விதிகள், பொது ஆணை விதிகள், தொழில் துறை நெறிமுறைகள், மற்றும் ஒழுங்குமுறைகள் அனைத்திற்கும் உங்கள் உள்ளடக்கமும் எந்தவொரு வெளிப்படுத்தல்களும் இணங்குவதை உறுதிப்படுத்துவதற்கும் நீங்களே பொறுப்பாவீர்கள்.
எல்லா வெளிப்படுத்தல்களும், பொறுப்புத்துறப்புகளும் எச்சரிக்கைகளும் தெளிவாகவும் கவனிக்கக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும்.
வணிக உள்ளடக்கம் உள்ளடக்கத்தின் வணிகத் தன்மை மற்றும் எதேனும் விளம்பரப்படுத்தப்பட்ட பிராண்டை அடையாளம் காண வேண்டும். இந்த உள்ளடக்கத்தை லேபிள் செய்ய நீங்கள் Snap இன் கட்டணப் பார்ட்னர்ஷிப் கருவியைபயும் பயன்படுத்த வேண்டும், தேவைப்பட்டால் உங்கள் வணிக உள்ளடக்கம் ரீடச் செய்யப்பட்டது என்பதைக் குறிக்கும் பொறுப்புத் துறப்பு அல்லது வாட்டர்மார்க்கிங்கை சேர்க்கவேண்டும்.
கட்டணப் பார்ட்னர்ஷிப் கருவியை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதற்கான உதாரண காட்சிகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன:
நீங்கள் ரோலர் ஸ்கேட்டிங் வீடியோக்களை உருவாக்கும் ஒரு படைப்பாளர். ஒரு ரோலர் ஸ்கேட் பிராண்ட் தங்களது பிராண்டை Snapஇல் நீங்கள் குறிப்பிடுவதற்காக உங்களுக்குப் பணம் அனுப்புகிறது.
நீங்கள் கட்டணப் பார்ட்னர்ஷிப் லேபிளை சேர்க்கவேண்டுமா? ஆம், விளம்பரம் செய்ய உங்களுக்குக் கட்டணம் வழங்கப்பட்டுள்ளது.
ரோலர் ஸ்கேட் பிராண்ட் உங்களுக்குப் பணம் அனுப்பாமல் "இலவசமாக” ஒரு ஜோடி ரோலர் ஸ்கேட்களை அனுப்புகிறது — இதனுடன் கூடவே உங்களுக்கு ஸ்கேட்கள் பிடித்திருந்தால் அவற்றுக்கான விமார்ச்சனைத்தை எழுதுமாறு கோரிக்கை விடுவித்துள்ளது.
நீங்கள் கட்டணப் பார்ட்னர்ஷிப் லேபிளை சேர்க்கவேண்டுமா? ஆம், விளம்பரம் செய்வதற்கு மதிப்புமிக்க பொருள் (ஸ்கேட்கள்) உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ரோலர் ஸ்கேட் பிராண்டு ஸ்கேட்களை நீங்களே வைத்துக்கொள்வதற்காக வழங்காமல், அவர்களின் பிராண்டைக் குறிப்பிட்டால் அல்லது லோகோவை எங்காவது காட்டினால் ஒரு வீடியோவிற்காக சில ஸ்கேட்களை இரவலாகப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கிறார்கள்.
நீங்கள் கட்டணப் பார்ட்னர்ஷிப் லேபிளை சேர்க்கவேண்டுமா? ஆம்.
ஸ்கேட்களை மதிப்பாய்வு செய்வதற்காக அவற்றை நீங்களே சொந்தமாக வாங்குகிறீர்கள்; மற்ற ஸ்கேட் பிராண்டுகளுக்கும் இதையே செய்கிறீர்கள்.
நீங்கள் கட்டணப் பார்ட்னர்ஷிப் லேபிளை சேர்க்கவேண்டுமா? இல்லை, ஏனெனில் பிராண்ட் உங்களுக்கு எந்த வகையிலும் பணம் வழங்கவில்லை.
நீங்கள் ரோலர் ஸ்கேட்களை தயாரித்து விற்பனை செய்கிறீர்கள்.
நீங்கள் கட்டணப் பார்ட்னர்ஷிப் லேபிளை சேர்க்கவேண்டுமா? ஆம், ரோலர் ஸ்கேட்களை பரிந்துரைக்க உங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுவதை வெளிப்படுத்த சேர்க்கவேண்டும்.
உங்கள் பொது சுயவிவரப் பக்கத்தில் உங்களால் பதிவிடப்பட்ட வணிக உள்ளடக்கம் Snapchat இன் For You பிரிவிலும் கிடைக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் மற்றும் அந்தப் பின்னணிக்குப் பொருத்தமாக அனைத்து வெளிப்படுத்தல்களும் அமைவதை உறுதிப்படுத்துவீர்கள். கதைகள், ஸ்பாட்லைட், வரைபடம் அல்லது செயலியின் பிற பகுதிகளில் உங்கள் வணிக உள்ளடக்கம் சாத்தியமான பார்வையாளர்களை சென்றடைய, உங்கள் வெளிப்பாடுகள் அந்தச் சூழல்களில் காணக்கூடியதாகவும் பொருத்தமானதாகவும் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக: நீங்கள் வணிக உள்ளடக்கத்தின் 6 ஸ்னாப்களைப் பதிவிட்டு, அவற்றில் முதல் ஸ்னாப்பில் மட்டும் வணிகத் தன்மையை வெளிப்படுத்தியிருந்தால், முதல் ஸ்னாப் மட்டுமே உங்கள் பொதுச் சுயவிவரத்தைத் தாண்டி பரவலாகக் காட்டப்படுவதற்குத் தகுதி பெறும்.
நீங்கள் Snapchat பயனர்களிடம் தனிப்பட்ட தகவலைக் கோரினால், Snap அல்ல, நீங்கள்தான் தரவைச் சேகரிக்கிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும், மேலும் தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படும் இடத்தில் தனியுரிமைக் கொள்கையை உடனடியாகக் கிடைக்கச் செய்ய வேண்டும்.
இனம் அல்லது இனத்தோற்றம், அரசியல் கருத்து, மத அல்லது மெய்யியல் நம்பிக்கைகள், தொழிற்சங்க உறுப்புரிமை, உடல்நலம், பாலியல் வாழ்க்கை அல்லது மருத்துவ வரலாறு பற்றிய தகவல்களை வணிக உள்ளடக்கம் சேகரிக்கக் கூடாது.
தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாகச் சேகரிக்கப்பட்டு செயலாக்கப்பட வேண்டும்.
எந்தவொரு நபரின் அல்லது நிறுவனத்தின் அறிவுசார் சொத்து, தனியுரிமை, பிரபல்யம் அல்லது பிற சட்ட உரிமைகளை வணிக உள்ளடக்கம் மீறக்கூடாது. இசை, லென்ஸ்கள், மற்றும் ஜியோஃபில்டர்கள் போன்ற Snap வழங்கும் ஏதேனும் உள்ளடக்கத்தின் பயன்பாடு உள்ளிட்ட உங்கள் உள்ளடக்கத்தின் அனைத்துக் கூறுகளுக்கும் தேவையான எல்லா உரிமைகளையும் அனுமதிகளையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். தனிநபர்கள் அல்லது பிராண்டுகளின் அனுமதியின்றி அவர்களின் பெயர், ஒப்புமை (தோற்ற ஒப்புமை உட்பட), குரல் (குரலொப்புமை உட்பட) அல்லது பிற அடையாளங்காட்டும் அம்சங்கள் இடம்பெறக்கூடாது.
Snapchat இல் வழங்கப்பட்ட வணிக உள்ளடக்கத்தால் உங்கள் பதிப்புரிமை, வணிகமுத்திரை அல்லது விளம்பர உரிமைகள் மீறப்பட்டதாக நீங்கள் நம்பினால், பதிப்பாளரை நேரடியாகத் தொடர்பு கொண்டு உங்கள் கவலைகளைத் தீர்க்க முயற்சிக்க நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். மாற்றாக, உரிமைதாரர்களும் அவர்களின் முகவர்களும் அறிவுசார் சொத்து மீறல் குறித்து Snapற்கு இங்கே புகாரளிக்கலாம். அத்தகைய அனைத்து புகார்களையும் நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.
வணிக உள்ளடக்கம் Snap அல்லது அதன் தயாரிப்புகளுடன் ஓர் இணைப்பு அல்லது ஒப்புதலைப் பரிந்துரைக்கக்கூடாது. Snapchat பிராண்ட் வழிகாட்டுதல்கள் அல்லது Bitmoji பிராண்ட் வழிகாட்டுதல்களில் அனுமதிக்கப்பட்டுள்ளதைத் தவிர, வணிக உள்ளடக்கமானது Snap-க்கு சொந்தமான வணிகமுத்திரை, Bitmoji கலைப்படைப்பு அல்லது Snapchat பயனர் இடைமுகத்தின் பிரதிநிதித்துவங்களைப் பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு Snap-சொந்தமான வணிக முத்திரையின் மாற்றப்பட்ட அல்லது குழப்பமான ஒத்த மாறுபாடுகளையும் வணிக உள்ளடக்கம் கொண்டிருக்கக்கூடாது.
Snapchat இல் விளம்பரங்கள் Snap இன் விளம்பர விதிகளுக்கு உட்பட்டவை.
மதுவை ஊக்குவிக்கும் வணிக உள்ளடக்கம், உள்ளடக்கம் காட்டப்படும், அல்லது அத்தகைய உள்ளடக்கம் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு, பொருந்தக்கூடிய சட்டப்பூர்வ குடிப்பழக்க வயதிற்கு உட்பட்ட எவருக்கும் அனுப்பப்படக் கூடாது. நீங்கள் கிடைக்கக்கூடிய இலக்கு விருப்பங்களைப் பயன்படுத்த வேண்டும். இத்தகைய உள்ளடக்கம் அதிகப்படியான அல்லது பொறுப்பற்ற முறையில் மது அருந்துதல் அல்லது குடிபோதையில் அல்லது போதையில் இருக்கும் நபர்களை சித்தரிக்கக் கூடாது.
டேட்டிங் சேவையை ஊக்குவிக்கும் வணிக உள்ளடக்கம் 18 வயதுக்குட்பட்ட எவருக்கும் அனுப்பப்படக்கூடாது. கிடைக்கக்கூடிய இலக்கு விருப்பங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும். இத்தகைய உள்ளடக்கமானது இயற்கையில் வெளிப்படையான பாலியல் தன்மை, பரிவர்த்தனை தோழமையைக் குறிப்பிடுதல், துரோகத்தை ஊக்குவிப்பது அல்லது கவர்ந்திழுப்பது, அல்லது சேவையைப் பயன்படுத்துவதற்கு மிகவும் இளமையாக இருக்கும் நபர்களை சித்தரிப்பது போன்றவை இருக்கக்கூடாது. ஆன்லைன் டேட்டிங் சேவைகளுக்கான உள்ளடக்கத்தை பின்வரும் நாடுகளை நோக்கி வைப்பதற்கு Snap அனுமதிப்பதில்லை: அல்ஜீரியா, பஹ்ரைன், எகிப்து, காசா மற்றும் மேற்குக் கரை, ஈராக், ஜப்பான், ஜோர்டான், குவைத், லெபனான், மொராக்கோ, ஓமான், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, துனிசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்.
எடை குறைக்கும் தயாரிப்புகள் அல்லது சேவைகளை ஊக்குவிக்கும் வணிக உள்ளடக்கம் 18 வயதுக்குட்பட்ட எவருக்கும் அனுப்பப்படக்கூடாது. கிடைக்கக்கூடிய இலக்கு விருப்பங்களை நீங்கள் பயன்படுத்த வேண்டும். அத்தகைய உள்ளடக்கமானது தொடர்புடைய உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து உரிமைகோரல்கள் உட்பட உணவுப் பொருட்களின் தவறான உரிமைகோரல்கள் அல்லது தவறான விளக்கங்கள் இருக்கக்கூடாது.
சூதாட்டச் சேவைகளை ஊக்குவிக்கும் வணிக உள்ளடக்கம், உள்ளடக்கம் காட்டப்படும், அல்லது அத்தகைய உள்ளடக்கம் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு, பொருந்தக்கூடிய சட்டப்பூர்வ சூதாட்ட வயதிற்கு உட்பட்ட எவருக்கும் அனுப்பப்படக் கூடாது. நீங்கள் கிடைக்கக்கூடிய இலக்கு விருப்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.
கிரிப்டோகரன்சி வாலட்கள் மற்றும் வர்த்தக தளங்களை உள்ளடக்கிய சில சிக்கலான நிதி தயாரிப்புகளை விளம்பரப்படுத்தும் வணிக உள்ளடக்கம், உள்ளடக்கம் காட்டப்படும் சட்டப்பூர்வ வயதுக்குட்பட்ட எவருக்கும் அல்லது அத்தகைய உள்ளடக்கம் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு அனுப்பப்படக்கூடாது. நீங்கள் கிடைக்கக்கூடிய இலக்கு விருப்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.
இணைய மருந்துக்கடைகள், மருத்துவர் பரிந்துரை மருந்துகள், பரிந்துரையின்றி பெறும் மருந்துகள், உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து துணை உணவுகள், ஆணுறைகள், ஹார்மோன் கருத்தடைகள், அழகு அறுவைசிகிச்சை/முறைகள் உள்ளிட்ட மருந்தியல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விளம்பரப்படுத்தும் வணிக உள்ளடக்கம், உள்ளடக்கம் காட்டப்படும் அல்லது அத்தகைய உள்ளடக்கம் அனுமதிக்கப்படாத இடங்களுக்கு பொருந்தக்கூடிய சட்டப்பூர்வ வயதிற்கு கீழ் உள்ள எவரையும் இலக்கு வைத்து அனுப்பப்படக்கூடாது. நீங்கள் கிடைக்கக்கூடிய இலக்கு விருப்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.
பின்வருவனவற்றுடன் தொடர்புடைய வணிகரீதியான உள்ளடக்கம் அனுமதிக்கப்படாது:
பொது அலுவலகத்திற்கான வேட்பாளர்கள் அல்லது கட்சிகளைப் பற்றிய தேர்தல் தொடர்பான உள்ளடக்கம், வாக்குச்சீட்டு நடவடிக்கைகள் அல்லது வாக்கெடுப்புகள், அரசியல் நடவடிக்கைக் குழுக்கள் மற்றும் வாக்களிக்க அல்லது வாக்களிக்க பதிவுசெய்ய மக்களை வலியுறுத்தும் உள்ளடக்கம்.
உள்ளூர், தேசிய அல்லது உலகளாவிய அளவில் அல்லது பொது முக்கியத்துவம் வாய்ந்த விவாதப் பொருளாக இருக்கும் பிரச்சினைகள் அல்லது நிறுவனங்கள் தொடர்பான வக்காலத்து அல்லது வாத உள்ளடக்கம். எடுத்துக்காட்டுகளில் பின்வருவன அடங்கும்: கருக்கலைப்பு, குடியேற்றம், சுற்றுச்சூழல், கல்வி, பாகுபாடு மற்றும் துப்பாக்கிகள் பற்றிய உள்ளடக்கம்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இது தேர்தல் அல்லது நேரடி வாக்கெடுப்பு, வாக்களிப்பு நடத்தை அல்லது சட்டமன்ற அல்லது ஒழுங்குமுறைச் செயல்முறைகளின் விளைவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக பொறுப்பேற்கும் மற்றும் வடிவமைக்கப்பட்ட எந்தவொரு உள்ளடக்கத்தையும் உள்ளடக்கும்.
Snapchat பயனர்கள் தங்களுடைய சொந்த அரசியல் கருத்துக்களை தடையின்றி வெளிப்படுத்தலாம், ஆனால் Snap அங்கீகரிக்கப்பட்ட சந்தைகளில் (ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர்த்து) அரசியல் செய்திகளின் கட்டண விளம்பரத்தை பாரம்பரிய விளம்பர வடிவங்களுக்கு மட்டுமே கட்டுப்படுத்துகிறது. இது நமது சமூகத்திற்கு பொறுப்பாக இருப்பதற்கும் வெளிப்படைத்தன்மையை பேணுவதற்கும் உள்ளது. அரசியல் விளம்பரங்கள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து எங்கள் விளம்பரக் கொள்கைகளைப் பார்க்கவும்.
வணிகரீதியான உள்ளடக்கம் உட்பட, Snapchat இல் உள்ள அனைத்து உள்ளடக்கங்களுக்கும் அடிப்படைத் தரநிலையாக இருக்கும் எங்கள் சமூக வழிகாட்டுதல்களைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளவும். வணிக உள்ளடக்கத்தின் பின்னணியில், நாங்கள் மேலும் இவற்றை தடைசெய்கிறோம்:
எந்த வகையான பாலியல் வேண்டுகோள்
எந்தவொரு சூழலிலும் பிறப்புறுப்பின் சித்தரிப்புகள் அல்லது கிராஃபிக் விளக்கங்கள், வெளிப்படும் மார்பகங்கள் அல்லது வெற்று பிட்டம், அல்லது பகுதியளவு-மறைக்கப்பட்ட நிர்வாணம் (அதாவது, உடல் வண்ணப்பூச்சு அல்லது எமோஜிகள் தவிர நிர்வாணமாக இருக்கும் நபர்)
எந்தவொரு சூழலிலும் குறிப்பிட்ட பாலியல் செயல்களின் சித்தரிப்புகள் அல்லது குறிப்புக்கள். பொருட்கள் கொண்டு அல்லது இல்லாமல் ஒரு குறிப்பிட்ட பாலினச் செயலைப் பின்பற்றும் சைகைகளும் இதில் அடங்கும்
சாதாரண பாலியல் சந்திப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் டேட்டிங் சேவைகள்
வயது வந்தோருக்கான பொழுதுபோக்கு (எ.கா., ஆபாச படங்கள், பாலியல் நேரடி ஸ்ட்ரீம்கள், ஸ்ட்ரிப் கிளப்புகள், பர்லெஸ்க்)
சம்மதமில்லாத பாலியல் உள்ளடக்கம் (கசிந்த, தனிப்பட்ட, பரிந்துரைக்கும் புகைப்படங்கள்
பாலியல் வன்முறை சித்தரிப்புகள் அல்லது தேவையற்ற குறிப்புகள்
துன்புறுத்தல் அல்லது அவமானப்படுத்துதல். எடுத்துக்காட்டாக: உடற்பயிற்சி தொடர்பான வணிக உள்ளடக்கம் உடல் வடிவம் அல்லது அளவு அடிப்படையில் யாரையும் குறைத்து மதிப்பிடக்கூடாது.
அவதூறு, ஆபாசமான மற்றும் ஆபாசமான சைகைகள்
ஒரு பொருளை அல்லது சேவையை வாங்குவதற்கு ஒருவரை மிரட்ட அல்லது பயமுறுத்துவதற்கான முயற்சிகள்
ஒரு செய்தி அல்லது ஆவணப் பின்னணிக்கு வெளியே கிராஃபிக், நிஜ வாழ்க்கை வன்முறை
சுய-தீங்கு, போர், கொலை, முறைகேடு அல்லது விலங்கு முறைகேடு போன்ற எந்தவொரு பெருமைப்படுத்தலும் உட்பட, வன்முறையை பெருமைப்படுத்துதல்
மரணம் அல்லது நீண்ட கால காயத்தை விளைவிக்கக்கூடிய தீவிரமான உடல் உபாதைகளின் குழப்பமான, கிராஃபிக் சித்தரிப்புகள்.
ஏமாற்றும் உரிமைகோரல்கள், சலுகைகள், செயல்பாடு அல்லது வணிக நடைமுறைகள் உட்பட தவறான அல்லது தவறாக வழிநடத்தும் உள்ளடக்கம்
போலி ஆவணங்கள் அல்லது சான்றிதழ்கள் அல்லது போலி தயாரிப்புகள் உட்பட மோசடியான பொருட்கள் அல்லது சேவைகளை ஊக்குவித்தல்
Snapchat அம்சங்கள் அல்லது வடிவமைப்புகள் என்ற தோற்றத்தை அல்லது செயல்களை பிரதிபலிக்கும் உள்ளடக்கத்தை உருவாக்குதல் அல்லது பகிர்தல்
விளம்பரப்படுத்தப்படும் பிராண்ட் அல்லது உள்ளடக்கத்துடன் தொடர்பில்லாத இறங்கும் பக்கங்களுக்கான ஏமாற்றும் பொத்தான்கள் அல்லது தூண்டிலிட்டு பிடிக்கும் இணைப்புகள்
மதிப்பாய்வைத் தவிர்க்கும் முயற்சியாக, மறைத்தல், முகப்புப் பக்க அணுகலை வேறு விதமாகக் கட்டுப்படுத்துதல் அல்லது சமர்ப்பித்ததைத் தொடர்ந்து URL உள்ளடக்கத்தில் மாற்றங்கள் செய்தல்
நேர்மையற்ற நடத்தையை ஊக்குவித்தல். (எ.கா., போலி ஐடிகள், கருத்துத் திருட்டு, கட்டுரை எழுதும் சேவைகள் தொடர்பான வணிக உள்ளடக்கம்)
சரக்குகளை வழங்காதது அல்லது தவறாக குறிப்பிடப்பட்ட ஷிப்பிங் தாமதங்கள் அல்லது சரக்கு கட்டுப்பாடுகள்
வடிவமைப்பாளர் அல்லது அதிகாரப்பூர்வமாக உரிமம் பெற்ற தயாரிப்புகளின் போலிகள் போன்ற கள்ளத் தயாரிப்புகளை விற்பதற்காக முதன்மையாக உருவாக்கப்பட்ட தயாரிப்புகள் அல்லது சேவைகள்
பிரபலங்கள் பாராட்டுரை அல்லது பயன்படுத்துவதாகப் பொய்ச் சான்றுகள் கொண்ட தயாரிப்புகள் அல்லது சேவைகள்
கந்து வட்டி, அதிக வட்டி கடன்கள், நிதித் தயாரிப்புகள் அல்லது சேவைகள் தொடர்பான உள்விவரக் குறிப்புகள், விரைவாகப் பணக்காரனாவதற்கான சலுகைகள், பிரமிட் திட்டங்கள் உள்ளிட்ட பிற ஏமாற்றும் அல்லது நம்ப முடியாத நிதிச் சலுகைகள் போன்ற ஏமாற்றும் நிதித் தயாரிப்புகள்
ஒரு குறிப்பிட்ட இனம், இனக்குழு, கலாச்சாரம், நாடு, நம்பிக்கை, தேசிய தோற்றம், வயது, பாலியல் நோக்குநிலை, பாலினம், பாலின அடையாளம் அல்லது வெளிப்பாடு, இயலாமை அல்லது நிலை அல்லது பாதுகாக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த எவரையும் இழிவுபடுத்தும், பாகுபாடு காட்டும் அல்லது வெறுப்பைக் காட்டும் உள்ளடக்கம்
சட்டவிரோத நடவடிக்கைகளை (நடத்தை, தயாரிப்புகள் அல்லது நிறுவனங்கள்) எளிதாக்குதல் அல்லது ஊக்குவித்தல். எடுத்துக்காட்டிற்கு:
சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம் அல்லது அழிந்து வரும் அல்லது அச்சுறுத்தலிலிருக்கும் இனத்தைச் சார்ந்த உயிரினங்களிலிருந்து பெறப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை ஊக்குவித்தல்
பதிப்புரிமைப் பாதுகாப்பு முறைமைகளை உடைக்க வடிவமைக்கப்பட்டவை (எடுத்துக்காட்டாக, மென்பொருள் அல்லது கேபிள் சைகை குழப்பிகள்) போன்ற பிறரின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் அல்லது சேவைகள்
வாகனம் ஓட்டும் போது ஸ்னாப்பிங் அல்லது உணவு அல்லாத பொருட்களை உட்கொள்வது போன்ற ஆபத்தான அல்லது தீங்கு விளைவிக்கும் செயல்களில் பங்கேற்பதை ஊக்குவித்தல் அல்லது பட்டியலிடுதல்.
சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு அல்லது மருந்துப் பொருட்களின் பொழுதுபோக்கு பயன்பாட்டின் சித்தரிப்பு.
பொதுச் சுகாதாரச் செய்திகள் அல்லது புகைத்தலை நிறுத்துதல் ஆகிய சூழ்நிலைகளில் தவிர புகைத்தல் அல்லது மின்சுருட்டுப் புகைத்தலைச் சித்தரித்தல்.
ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துணைப் பொருட்களை ஊக்குவிக்கும் உள்ளடக்கம். துப்பாக்கிகள், வெடிமருந்துகள், வானவேடிக்கைகள், போர் கத்திகள் மற்றும் மிளகு தெளிப்பான்கள் ஆகியவை இதில் அடங்கும்.