தரவுத் தூய்மை அறை விதிமுறைகள்

செயல்திறனானது: ஜூலை 25, 2025

நடுவர் தீர்ப்பு அறிவிப்பு: தொழில் சேவை விதிமுறைகளில் உள்ள நடுவர் தீர்ப்பு விதிகளுக்கு நீங்கள் கட்டுப்படுவீர்கள். நீங்கள் SNAP INC. உடன் ஒப்பந்தம் போடுகிறீர்கள் என்றால், பிறகு நீங்களும் SNAP INC.-உம் பிரதிநிதித்துவ நடவடிக்கை வழக்கு அல்லது பிரதிநிதித்துவ நடுவர் தீர்ப்பில் பங்கேற்கும் உரிமைக்கு விலக்கு அளிக்கிறீர்கள்.

அறிமுகம்

இந்தத் தரவுத் தூய்மை அறை விதிமுறைகள் உங்களுக்கும் Snapக்கும் இடையில் சட்டரீதியாகப் பிணைக்கப்பட்ட ஓர் ஒப்பந்தத்தை உருவாக்குகிறது, அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் நபர் தரவுத் தூய்மை அறைச் சேவை வழங்குநரால் வழங்கப்படும் தரவுத் தூய்மை அறைச் சேவைகளைப் பயன்படுத்தி விளம்பரச் செயல்திறன் நுண்ணறிவுகளை உருவாக்குவதற்காகத் தொழில் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதை நிர்வகிக்கிறது (“தரவுத் தூய்மை அறைத் திட்டம்”), மேலும் தொழில் சேவை விதிமுறைகளில் உள்ளடங்கியதாகும். இந்தத் தரவுத் தூய்மை அறை விதிமுறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள சில விதிமுறைகள் தொழில் சேவை விதிமுறைகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. 

1. தரவுத் தூய்மை அறைத் திட்டம்

a. நாம் ஒவ்வொருவரும் தரவுகளை (சேவைகள், இணையதளங்கள், செயலிகள் அல்லது கடைகளில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றிய தரவுகளும் இதில் அடங்கும்) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட மூன்றாம் நபர் தரவுத் தூய்மை அறைச் சேவை வழங்குநர்களுக்குக் கிடைக்கச் செய்து, தொழில் சேவைகளை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பான நுண்ணறிவுகளை உருவாக்க தரவுத் தூய்மை அறைத் திட்டம் வழிசெய்கிறது (ஒவ்வொன்றும் ஒரு “DCR சேவை வழங்குநர்”). தொழில் சேவைகளின் உங்கள் பயன்பாடு தொடர்பான தரவுகள் மூலம் தொகுக்கப்பட்ட மற்றும் அநாமதேயமாக்கப்பட்ட நுண்ணறிவுகளை உருவாக்குவதற்கு, DCR சேவை வழங்குநருக்கு அறிவுறுத்தல்களை வழங்க, ஒரு நபரால் முன்கூட்டியே எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட வினவல்கள் மற்றும் அறிவுறுத்தல்களை மட்டுமே மற்றவர்கள் பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்கிறோம்.

b. நீங்களும் Snap-உம் பின்வருவனவற்றை ஒப்புக்கொண்டு ஏற்கிறீர்கள்: நாம் ஒவ்வொருவரும் (i) DCR சேவை வழங்குநருக்கு என்னென்ன தரவை வழங்குவது என்பதைத் தனித்தனியாகத் தீர்மானிக்கிறோம்; (ii) அந்தத் தரவை மற்றவர் பெறுவதையோ அணுகுவதையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை அல்லது அனுமதிக்கவில்லை; மற்றும் (iii) தரவைச் செயலாக்கி நுண்ணறிவுகளை வழங்குவதற்காக DCR சேவை வழங்குநர்களுக்குத் தனித்தனி அறிவுறுத்தல்களை வழங்குகிறோம். மேலும் உங்கள் தனிப்பட்ட தரவுகள் உள்ள இடங்களில் நீங்கள் பின்வருவனவற்றை ஒப்புக்கொண்டு ஏற்கிறீர்கள்: (aa) தரவுத் தூய்மை அறைத் திட்டத்தின் நோக்கத்திற்காக நாம் ஒவ்வொருவரும் அவரவர் செய்யக்கூடிய (அல்லது DCR சேவை வழங்குநர் செய்வதற்கு நாம் அறிவுறுத்தல்களை வழங்கக்கூடிய) தரவுச் செயலாக்கச் செயல்பாடுகளுக்குத் தனிப்பட்ட கட்டுப்பாட்டாளராகச் செயல்படுகிறோம்; (bb) Snap உங்கள் தனிப்பட்ட தரவிற்கு அணுகலைப் பெறாது அல்லது உங்களின் சார்பாக தனிப்பட்ட தரவைச் செயலாக்காது; மற்றும் (cc) தரவுத் தூய்மை அறைத் திட்டத்தின் நோக்கத்திற்காக உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதற்கு உங்களால் நியமிக்கப்பட்ட ஒரே தரவுச் செயலாக்குநர் DCR சேவை வழங்குநர் மட்டுமே ஆவார். தரவுத் தூய்மை அறைத் திட்டத்தின் நோக்கத்திற்காக நீங்கள் வழங்கும் தரவுகளில் ஏதேனும் தனிப்பட்ட தரவு இருந்தால், தனிப்பட்ட தரவு விதிமுறைகள் பொருந்தும்.

c. தரவுத் தூய்மை அறைத் திட்டம் தொடர்பாக ஏதேனும் மூன்றாம் நபரால் வழங்கப்படும் தயாரிப்புகள் அல்லது சேவைகளை நீங்கள் பயன்படுத்தினால் (DCR சேவை வழங்குநர் வழங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உட்பட), அதை உங்களின் சொந்த இடரில் செய்கிறீர்கள் மற்றும் மூன்றாம் நபரின் விதிமுறைகளுக்கு உட்பட்டுச் செய்கிறீர்கள். அந்த மூன்றாம் நபர் தயாரிப்புகள் அல்லது சேவைகளை நீங்கள் பயன்படுத்துவதன் விளைவாக உங்களுக்கு ஏற்படும் எந்தவொரு சேதங்கள் அல்லது இழப்புகளுக்கும் Snap பொறுப்பேற்காது.

2. தரவு

a. தொழில் சேவை விதிமுறைகளில் வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக, Snap மற்றும் நீங்கள் ஒவ்வொருவரும் பின்வருவனவற்றைச் செய்யமாட்டீர்கள், அறிவுறுத்தமாட்டீர்கள், இவற்றைச் செய்வதற்கு எந்தவொரு நபரையும் (DCR சேவை வழங்குநர் உட்பட) அங்கீகரிக்க அல்லது ஊக்குவிக்கமாட்டீர்கள் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்: (i) இந்தத் தரவுத் தூய்மை அறை விதிமுறைகளில் வெளிப்படையாக அனுமதிக்கப்பட்டதைத் தவிர, தரவுத் தூய்மை அறைத் திட்டத்தின் வழியாக நுண்ணறிவுகளை உருவாக்குவதற்காக DCR சேவை வழங்குநருக்கு மற்றவர்கள் வழங்கும் தரவுகளில் அல்லது அவற்றைப் பயன்படுத்தி எந்தவொரு செயல்பாடோ பகுப்பாய்வோ செய்யமாட்டீர்கள்; அல்லது (ii) DCR சேவை வழங்குநருக்கு மற்றவர்கள் கிடைக்கச் செய்யும் இதுபோன்ற தரவுகளை (தனிப்பட்ட தரவு உட்பட) பயன்படுத்தவோ பகுப்பாய்வோ செய்யவோ, அணுகவோ நகலெடுக்கவோ, மாற்றியமைக்கவோ, வெளிப்படுத்தவோ, பரிமாற்றவோ ரிவர்ஸ் என்ஜினியர் செய்யவோ, அவற்றின் அநாமதேய நிலையை நீக்கவோ, அவற்றிற்கு அணுகல் வழங்கவோ மாட்டீர்கள்.

b. தரவுத் தூய்மை அறைத் திட்டத்தில் இருந்து பெறும் எந்தவொரு முடிவுகளையும் பயன்படுத்தி Snap பின்வருவன போன்ற சேவைகளை வழங்கலாம் (DCR சேவை வழங்குநரால் வழங்கப்படுபவையும் அடங்கும்): (i) DCR சேவை வழங்குநர் வழங்கியவற்றுடன் கூடுதலாக நுண்ணறிவுகளை வழங்குதல்; மற்றும் (ii) சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் துணைச்சேவைகளை வழங்குதல். தரவுத் தூய்மை அறைத் திட்டத்தில் இருந்து உங்களுக்குக் கிடைக்கச் செய்யப்படும் அனைத்து முடிவுகளும் தரவுகளும் நுண்ணறிவுகளும் (Snap அல்லது DCR சேவை வழங்குநரால் வழங்கப்படுபவை உட்பட) தொழில் சேவைத் தரவுகளாகக் கருதப்படும், சேவைகளின் வழியாக உங்களின் விளம்பரப் பரப்புரைகளை நிர்வகிக்கும் உங்கள் உள்ளார்ந்த பயன்பாட்டிற்காக தொகுக்கப்பட்ட மற்றும் அநாமதேயமாக்கப்பட்ட வகையில் மட்டுமே அவற்றைப் பயன்படுத்தலாம்.

3. முழுமையான ஒப்பந்தம்

தரவுத் தூய்மை அறைத் திட்டத்தை நீங்கள் பயன்படுத்துவது தொடர்பாக உங்களுக்கும் Snapக்கும் இடையில் முழுமையான புரிதலையும் ஒப்பந்தத்தையும் இந்தத் தரவுத் தூய்மை அறை விதிமுறைகள் ஏற்படுத்துகின்றன, தரவுத் தூய்மை அறைத் திட்டம் தொடர்பாக உங்களுக்கும் Snapக்கும் இடையிலான பிற அனைத்து ஒப்பந்தங்களையும்விட மேலோங்குகின்றன.